News Just In

1/22/2022 06:35:00 AM

மழையுடனான காலநிலை நிலவும் வரை நாளாந்தம் ஒன்றரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் : அமைச்சர் உதய கம்மன்பில

மழையுடனான காலநிலை நிலவும் வரை நாளாந்தம் ஒன்றரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மழை காலநிலை ஆரம்பிக்கும் வரையில், எரிபொருளின் மூலமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின், எங்காவது பாரியளவான டொலர் கடனைப் பெறவேண்டும்.

இல்லாவிட்டால், மார்ச் மாதம் முற்பகுதியாகும்போது, சுமார் நான்கு மணிநேர மின் துண்டிப்பை அமுலாக்க வேண்டி ஏற்படும்.

எனவே, அடுத்த மழையுடனான காலநிலை வரும் வரையில், ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை மேற்கொள்வது சிறந்ததாகும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, களனிதிஸ்ஸ கூட்டு வட்ட மின் நிலையத்தில் இருந்து 165 மெகாவோட் அலகு மின்சாரமும், களனிதிஸ்ஸ மின்நிலையத்தில் இருந்து 115 மெகாவோட் அலகு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையிடம் இருந்து கிடைக்க பெற்ற டீசல் தொகையானது எதிர்வரும் 7 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: