News Just In

1/08/2022 12:02:00 PM

இலங்கையர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும்மரக்கறிகளின் விலை!


இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் உணவின் சில்லறை விலை 15வீதத்தினால் அதிகரித்தது. உணவின் சில்லறை விலையை மாதாந்தம் கண்காணிக்கும் BCI என்ற Advocata நிறுவகத்தின் “பாத் கரி இன்டிகேட்டர்” இதனை தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி மரக்கறிகளின் விலை உயர்வினால் உந்தப்பட்டதாக கொழும்பை தளமாகக் கொண்ட குறித்த சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

இதில் 100 கிராம் பச்சை மிளகாய் 18 ரூபாவில் இருந்து 71 ரூபாவாக அதிகரித்துள்ளமையும் அடங்குகின்றது. இது ஒரு மாதத்தில் 287% அதிகரிப்பாகும்.

இதேவேளை கத்தரிக்காய் 51 வீதமாகவும் சிவப்பு வெங்காயம் 40 வீதமாகவும் போஞ்சி மற்றும் தக்காளி விலை 10வீதமாகவும் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2019 முதல், உணவின் விலை ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது,மேலும் டிசம்பர் 2020 உடன் ஒப்பிடும்போது, ​​உணவின் விலை 37% ஆல் அதிகரித்துள்ளது.

அதாவது சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் ரூ. 2020 டிசம்பரில் BCI உணவுப் பொருட்களின் மீது வாரந்தோறும் 1,165 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.

எனினும். ஒரு வருடம் கழித்து அதே பொருட்களுக்கு 1,593 ரூபாவை செலுத்த நேரிட்டதாக BCI என்ற Advocata நிறுவகத்தின் “பாத் கரி இன்டிகேட்டர்” குறிப்பிட்டுள்ளது.

No comments: