News Just In

1/19/2022 02:18:00 PM

புதிய மட்டு.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு வாழ்த்து



மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள Dr.ஜி.சுகுணன் அவர்களுக்கு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கொரோனா காலப்பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளாராக அர்ப்பணிப்புடன் இரவு, பகலாக தங்களது கடமைகளை மிகச்சிறப்பான முறையில் இன, மத பேதங்களுக்கப்பால் அனைத்தும் மக்களுக்கும் வழங்கிய ஆளுமைமிக்க தாங்கள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளாக நியமிக்கப்பட்டதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைக்கின்றோம்.

அத்தோடு, எமது மாவட்டத்தில் எதிர்நோக்கும் பல்வேறு சுகாதார ரீதியிலான சவால்களை நாம் வெற்றி கொள்ள தங்களுடன் இணைந்து பணியாற்ற வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் எந்நேரத்திலும் தயாராகவுள்ளோம் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட தங்களுக்கு அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என அபிவிருத்திக்குழுவின் பிரதித்தலைவர் மெளலவி எம்.எஸ்.எம்.ஹாறூன் (ஸஹ்வி) மேலும் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்



No comments: