News Just In

1/27/2022 10:43:00 AM

அக்கரைப்பற்று மாநகர சபையினால் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு



நூருல் ஹூதா உமர்
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 வரவு செலவுத்திட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் எண்ணக்கருவில் புதுப்பள்ளி,மேற்கு, நூராணியா, பதூர் வட்டாரங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி தலைமையில் ஹல்லாஜ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாநகர சபையின் 2021 பாதீட்டின் படி ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் (350,000) நிதிப்பங்களிப்பில் பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், மேற்குறிப்பிட்ட வட்டாரங்களினைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட சுமார் 40 பயனாளிகளுக்கு அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சீ.பதுறுதீன், எம்.ஐ.எம்.அன்சார், ஏ. கே.ஏ. பாஹிம், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி மற்றும் வட்டார பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





No comments: