News Just In

1/23/2022 06:52:00 AM

கல்லடி - டச்பார் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி - டச்பார் புனித அந்தோனியார் ஆலயத்தின் 42 வது வருடாந்த திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கல்லடி - டச்பார் பிரதான வீதிகள் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்ததும், கூட்டெருக்கியக்கத் திரு அவையில் ஆவியானவரின் செயற்பாடு எனும் சிந்தனைக்கு அமைய நற்கருணை வழிபாடுகள் நடைபெற்றன.

நவநாட் காலங்களில் அருட்தந்தையர்களான அருட்பணி ஜோட்டன் ஜோன்சன், அருட்பணி ஏ.ஏ.நவரெட்ணம் அடிகளார் ஆகியோரது சிறப்பு அருளுரைகளுடன் திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன.

இவ்வாண்டிற்கான திருவிழா திருப்பலியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு அருட்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் (இயேசு சபைத்துறவி) அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நவ நாட்காலங்களில் புனிதரின் பரிந்துரையால் இறையருள் பெற்றிட அந்தோனியாரின் பக்தர்களை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் , திருச்சுருப பவனியில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும், திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுப்பதனையும், அதில் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.









No comments: