News Just In

1/23/2022 06:45:00 AM

மட்டக்களப்பு சினிமா வரலாற்றில் அசைக்க முடியாத மற்றுமோர் திருப்பம்!!

மட்டக்களப்பு சினிமா வரலாற்றில் ஒரு அசைக்க முடியாத திருப்பம்தான் வர்த்தக சினிமா என்பது. அந்த வர்த்தக சினிமாவில் ஏற்கெனவே மாயை மற்றும் தளறாதவன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவர்களுடைய பாதையை செப்பனிட்டு முன்னேறி வந்து கொண்டிருக்கும்போது வைத்தியர் சுகுணன் இந்த திரைத்துறைக்குள் வந்து சிப்ஸ் சினிமா எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி கோடீஸ்வரனின் அடுத்த படைப்பான கலிகாலன் திரைப்படத்தை தயாரித்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அவர் திரையிட்டார். இந்த திரைப்படம் மட்டகளப்பு வரலாற்றில் வசூல் சாதனை படைத்த ஒரே ஒரு திரைப்படம் என்றும் சொல்லலாம்.

வர்த்தகம் என்பது அனைத்தும் வணிக ரீதியான நோக்கமாகக் கொண்டது அதில் ஒரு அங்கமாக லெரோசியன் அவர்கள் இலங்கையில் digital rights எனும் ஒரு புதிய பாதையை ஆரம்பித்து கரிகாலன் தயாரிப்பாளர் வைத்தியர் சுகுணன் மற்றும் இயக்குனர் கோடீஸ்வரன் உடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் லெரோசியன் அவர்களுக்கு அந்தப் படைப்பின் உரிமத்தை கொடுப்பதாக தீர்மானித்து உத்தியோகபூர்வமாக அவர்களது youtube தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். அதன் ஒரு கட்டமாக மாபெரும் விழாவை ஆரம்பித்து அதில் அந்த உரிமத்தை கையளித்து அன்றிலிருந்து lero productions க்கு வழங்கியுள்ளார்கள்.

அவர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு அங்கம் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வாக அமைந்ததன் அடிப்படையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், சிரேஷ்ட சட்டத்தரணி சிவநாதன் மற்றும் வர்த்தக சினிமாவின் நாயகனும் அம்கோர் மற்றும் லிப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான முரளிதரன் ஆகியோர் விருந்தினராக அந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு கலிகாலன் திரைப்படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பும் மிக சிறப்பான ஒரு அங்கமாக இருந்தது.

இதன்போது மாகாணப் பணிப்பாளர் நவநீதன் அவர்கள் உரையாற்றும்போது நம் சினிமா வளர்ந்து விட்டதாகவும் இலை மறை காயாக இருக்கும் கலைஞர்களுக்கு கோடிஸ்வரன் அவர்கள் முன்னுதாரணமாக இருப்பதாகவும் மற்றும் இந்த புதிய வர்த்தக சினிமா பாதை சிறக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

Lero productions உரிமையாளர் லெரோசியன் தனது உரையில் இந்த திரைப்படத்தை அவர் பார்க்கவில்லை என்றும் இந்த திரைப்படத்தில் நம்பிக்கை இருப்பதால் தான் இதை வாங்குகிறேன் என்றும் இனி வரும் திரைப்படங்களும் அவர் வாங்கி உரிமம் கோர உள்ளதாகவும் மகிழ்வான ஒரு உரையை நிகழ்த்தினார்.








No comments: