News Just In

12/27/2021 01:50:00 PM

நாட்டில் நான்காவது தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் ஆரம்பம்?


கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.இன்னமும் மூன்றாவது தடுப்பூசியை உரிய முறையில் மக்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்களுக்கு சிறிய கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அதன் பின்னர் நான்காவது தடுப்பூசி குறித்து சிந்திக்க வேண்டும். எனினும் தரவுகள் மீளாய்வு செய்த பின்னர் நான்காவது தடுப்பூசி வழங்கப்படலாம்.
நாம் அனைவரும் இந்த தடுப்பூசிக்கு புதியவர்கள். இதனால் கால அவகாசத்துடன் நான்காவது தடுப்பூசி, ஐந்தாவது தடுப்பூசி அல்லது ஆறாவது தடுப்பூசி வழங்கப்படுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவின் ஊடாக உலக நாடுகளின் தடுப்பூசிகள் தொடர்பிலான தரவுகள் குறித்து ஆராய்ந்த பின்னர் எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: