இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன் மற்றும் இருவர் இன்று இரவு அமெரிக்கா செல்கின்றார்கள். அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பில் செல்லும் இவர்கள் அங்கு சில உத்தியோக பற்றற்ற சந்திப்புகளிலும் ஈடுபட்ட பின்னர் நாடு திரும்புவார்கள் என அறியமுடிகிறது.
அமெரிக்கா செல்லும் சுமந்திரன் MP அங்கிருந்து பிரிட்டன் செல்லவுள்ளதாக அறியமுடிகின்றது. சுமந்திரனுடன் இரா. சாணக்கியன் MP உம் செல்வதாக அறியமுடிகின்றது.
பிரிட்டனில் இருந்து கனடா செல்லும் இவர்கள் தமிழரசுக்கட்சியின் கனடா கிளையினருடன் கலந்துரையாடலை நிகழ்த்திவிட்டு 28ம் திகதியே நாடு திரும்பவுள்ளனர். இந்த பயணம் பற்றி தமிழரசுக்கட்சிக்குள் பெரும் புகைச்சல் ஏற்பட்டு இந்த விவகாரத்தை விவாதிக்க கட்சியின் மத்திய குழுவை கூட்டுமாறு கட்சியின் முக்கியத்தர்கள் கட்சித் தலைமையிடம் கேட்டு உள்ளனர்.
No comments: