News Just In

11/15/2021 07:16:00 PM

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வு !


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் கந்த சஷ்டி முருக நாம பஜனை நிகழ்வானது காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன், அறங்காவலர் ஒன்றிய தலைவர் இரா. குணசிங்கம், செயலாளர் எஸ்.நந்தேஸ்வரன், மன்ற உபசெயலாளர் எஸ்.விஜயரத்தின், மற்றும் மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் ந.பிரதாப், காரைதீவு பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சிவராஜா சிவலோஜினி, கல்முனை வடக்கு இந்து கலாசார உத்யோகத்தர் உருத்திரமூர்த்தி கெளசல்யவாணி, திருக்கோவில் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் பிரசாந் சர்மிளா என்போர் கலந்து கொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினர். மற்றும் சகானாகலைக்கூட பஜனை குழுவினரின் முருக நாம பஜனை இடம்பெற்றதுடன் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புக்களை இந்துசமய கலாசார மாவட்ட செயலக உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.

மாளிகைக்காடு நிருபர்








No comments: