கொரரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீளமைப்பதற்காக மக்களை மகிழ்வூட்டி விழிப்பூட்டும் கலா ரசனை நிகழ்வுகள் ஏறாவூர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதேச முன்னணி கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு ஏறாவூர் வாவிக்கரையோர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை 27.11.2021 இரவு இடம்பெற்றது. நிகழ்வில் கலா ரசிகர்கள் பொதுமக்கள் துறைசார்ந்த ஆரவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச கலைஞர்கள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமும் அந்நோய்பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து தமது கலை நிகழ்வுகளினூடாக வெளிப்படுத்தினர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் நிஹாறா தற்ஆபோது நாம் வழமையான எமது அலுவல்களுக்கு முழுக்குப் போட்டு கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அனைத்து விடயங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பற்றித்தான் எமது அன்றாட வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்கள் அமைந்து விட்டது என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தெரிவித்தார்.
சுக சுக்கங்கள் ஓய்வு நேர பொழுது போக்குகள் கலை நிகழ்வுகள் தொழில்துறை நடவடிக்கைககள் எல்லாவற்றிலுமே எம்மைக் கட்டிப் போட்டு விட்டது கொரோனா வைரஸ். ஆகவே இந்த உலகளாவிய நெருக்கடியை கட்டுப்பாட்டுடன் இருந்துதான் வெற்றி கொள்ள வேண்டும். கொரோனா ஒழிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட ஆயத்தமாகும்போது சுகாதாரத்துறையினரின் எச்சரிக்ககை எம்மை மீண்டும் விழித்துக் கொள்ளச் செய்துள்ளது. கொரோனாவினால் பாதிப்பிற்குள்ளாகி ஏற்பட்ட மன அழுத்தம் இன்னமும் நீங்காத நிலையில் மீண்டும் எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டிருக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் விழிப்பாக இருந்து தன்னையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையில் இயல்பான எமது கலாசாரங்களையும் பேணிக் கொள்வதன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட மன உளைச்சல் குறைய வழியேற்படும்” என குறிப்பிட்டார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: