News Just In

8/17/2021 07:38:00 AM

முப்பதைந்து வருட ஆசிரியப் பணியில் இருந்து உமாபாஸ்கரி மயில்வாகனம் அவர்கள் ஓய்வுபெறுகின்றார்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வருடம் விஞ்ஞானப் பாட அசிரியராக பணியாற்றிய திருமதி உமாபாஸ்கரி மயில்வாகனம் அவர்கள் தனது 60ஆவது வயதில் அரச பணியிலிருந்து திங்கட்கிழமை (16.08.2021) ஓய்வு பெறுகின்றார்.

திருமதி உமாபாஸ்கரி மயில்வாகனம் அவர்கள் திருகோணமலை கூட்டாம்புளி தம்பலகாமம் என்னும் இடத்தில் பிறந்து தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் திருகோணமலை ஸ்ரீசண்முகா வித்தியாலயத்தில் உயர்கல்வியையும் கற்று கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது தொகுதி மாணவர்களுக்கான விஞ்ஞானமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு களுதாவளையில் வசித்துவரும் இவர் முன்னாள் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் துணைவியாவார்.

விஞ்ஞானப் பட்டதாரியான இவர் உயிரியல் பாட ஆசிரியராக திகோணமலை கிண்னியா மத்திய மகா வித்தியலயத்தில் முதல் நியமனத்தையும், திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, ஸ்ரீசண்மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளிலும் கடமையாறியதுடன் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, களுதாவளை மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார். அத்தோடு களுதாவளை மகா வித்தியாலய உயர்தர விஞ்ஞாப்பிரிவின் ஆரம்ப கர்த்தாங்களில் முதல் இவர் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் செட்பாளையம், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலைகளிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இவர் தனது சேவைக் காலதத்pல் அற்பணிப்போடும், நேரிய சிந்தனையோடும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் மட்டில்லாப் பணியாற்றியது மட்டுமல்லாது களுதாவளை மகா வித்திலாயத்தின் உதவி அதிபராகவும் இருந்து பாடசாலை முகாமைத்துவப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: