News Just In

8/05/2021 10:35:00 PM

மட்டக்களப்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை கிழித்தெறிய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!!


காணொளி- https://youtu.be/nbN3ELd-EIo
மட்டக்களப்பு நகரில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் சிவில் சமூகம் ஆகியன இணைந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று(05) முன்னெடுத்தனர்.

ஆசிரியர்களின் போராட்டம் நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் "பல்கலைக்கழக ஆணைக்குழுவை சுயாதீனமாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாற்றி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை கிழித்தெறி" எனும் தொனிப் பொருளினை மையப்படுத்தியதாக குறித்த இன்றைய மாபெரும் கண்டன பேரணி அமைந்திருந்தது.

கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது நடைபவனியாக மட்டக்களப்பு மாநகர சுற்றுவட்டத்தினை அடைந்து மீண்டும் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூகம் இணைந்து இன்றைய தினம் ஒன்றிணைவோம் உரிமை வென்றெடுப்போம்" என்ற கோஷத்துடன் குறித்த கண்டனப் பேரணியினை முன்னெடுத்தனர்.

இதன்போது கொத்தலாவல சட்டத்தை கல்வியில் திணிக்காதே, கல்வியை இராணுவமயமாக்காதே, இலவச கல்வியை பறிக்காதே போன்ற பல்வேறு கோஷங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு பெருமாலாவானவர்களின் ஆதரவுடன் குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















No comments: