News Just In

8/13/2021 02:28:00 PM

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையினரின் மகத்தான பணி...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கொவிட் - 19 செயற்பாடுகளுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை முழுவதும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களை வழங்கியும் உதவி வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் சகாதார வைத்திய அதிகாரிகள் மணிமனைகளால் முன்னெடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் தொண்டர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவ்வாறு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு உதவும் தொண்டர்களுக்குரிய விளக்கங்களும், அது தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(12) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் தம்பிப்போடி வசந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செயலாளர் சாமித்தம்பி மதிசுதன் பொருளாளர் வடிவேல் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் கந்தசாமி நவநாதன், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி வேணுஷா பிரசாந் கிளை உத்தியோகஸ்த்தர் கண்டுமணி ரூபன், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தொண்டர்களுக்கு கொவிட் - 19 தொடர்பிலும், அதன் தடுப்பூசி தொடர்பிலும், தடுப்பூசி வழங்கும் இடங்களில் சுகாதாரத்துறை உத்தியோகஸ்த்தர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், கையுறை, தொற்று நீங்கி என்பனவும் வழங்கப்பட்டன. இத்தொண்டர்கள் வெள்ளிக்கிழமை(13) முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும்> தலா இரண்டு தொண்டர்கள் வீதம் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் இடர்களுக்காக அரசாங்கம் மக்களுக்கு உதவி வருவதற்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தம்மாலான உதவிகளை இலங்கை முழுவதும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.







No comments: