News Just In

8/22/2021 09:17:00 AM

கொரோனாவால் மீள்குடியேற்ற கிராம மக்களும் பாதிப்பு...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை - வேலூர் மீள் குடியேற்றக் கிராம மக்கள் 1990 ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து 2010 ஆண்டு மீள் குடியேற் றம் செய்யப்பட்டனர்.

இம் மீள் குடியேற்றக் கிராமம் 2018.3.21 நிர்மாணிக்கப்பட்டு 2010 ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

சுமார் 50 குடும்பங்கள் இக்கிராமத் தில் வாழ்கின்றனர் இவர்களுள் 25 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேற்றம் செய்யப்பட்ட வர்கள். இக்கிரா மக்கள் தினக்கூலிகளா கவும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொவிட் - 19 கொரோனா காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு வாழ் வாதாரம் இழந்துள்ளதாகக் கூறுகின்றனர். கொரோனா காரணமாக வேலைக்கு வரவேண்டாம் என்று கூறுகிறார்கள்
கூலி வேலை கூட கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர்.

வேலை இல்லாததனால் கையில் பணம் இல்லை அதனால் பிள்ளைகளுக்கு பால்மா வாங்க முடியாதுள்ளது பிள்ளைகளின் நிலை மோசமாக உள்ளது. மீன்பிடித் தொழிலும் கஸ்டம் "பாஸ்" வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும். மீன் பிடித் தொழிலும் சரியாக நடப்பதில்லை சிலிண்டருக்கு விலை கூடி விட்டது சீனிக்கும் விலை கூடிவிட்டது. பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்றால் மருந்து எடுக்க கஸ்டம். இவ்வாறான பல கஸ்டங்களுக்கு மத்தியில் இக்கிராமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.






No comments: