News Just In

8/31/2021 08:00:00 AM

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,096 மெற்றிக் தொன் சீனி மீட்பு...!!


சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,096 மெற்றிக் தொன் சீனி நுகர்வோர் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தையில் சீனி தட்டுப்பாடு ஏற்படும் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இவ்வாறு சீனி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரது ஆலோசனைக்கு அமைய நுகர்வோர் அதிகார சபையினர் கடந்த தினங்களில் சுற்றிவளைப்புக்களில் ஈடுப்பட்டனர்.

இதற்கமைய நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வத்தளை கெரவலபிடிய பிரதேசத்தில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத களஞ்சியசாலையில் மிகவும் சூட்சமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4096 மெற்றிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டதுடன், களஞ்சியசாலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

No comments: