News Just In

7/05/2021 07:25:00 PM

கிழக்கு மாகாண கொரோனா வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் நலன் கருதி ஒட்சிசன் சிலிண்டர்களும் ஒட்சிசன் றெகுலேற்றர்களும் வழங்கிவைப்பு...!!


கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 20 கொவிட் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொவிட் தொற்றிற்குள்ளாக்கப்பட்டவர்களின் நலன் கருதி அமெரிக்க யூத உலக சேவை(AMERICAN JEWISH WORLD SERVICE)நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் கிழக்கு மாகாண பங்காளர் அமைப்புக்களின் உதவிகளுடனும் 7.7 மில்லியன் பெறுமதி கொண்ட 100 ஒட்சிசனுடன் கூடிய சிலிண்டர்களையும், 100 ஒட்சிசன் றெகுலேற்றர்களையும் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் 30 ஒக்சிஜன் சிலின்டர்களையும் 25 ரெகுலேட்டர்களையும் இன்று (05) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது

இன்று உலகையோ ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொவிட்டின் 3வது அலைத் தாக்கமானது குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது இந்நிலையில் கொவிட் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு இவ் ஒக்சிஜன் தேவையுள்ளதனை பிராந்திய சகாதார சேவைகள் பணிமனையின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க அகம் மனிதாபிமான வள நிலைய நிறுவனம் மற்றும் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைந்து 30 ஒக்சிஜன் சிலின்டர்களையும் 25 ரெகுலேட்டஸ்களையும் இன்று வழங்கிவைத்தது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பன்டிகோரள தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் திரு.க.லலகுசராசா, திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரேம்நாத் அதிதிகளாக கலந்து கொண்டதோடு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், சுகாதார பணிமணையின் துறைசார் விடையங்களிற்கு பொறுப்பான வைத்தியர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர், நிறுவனங்களிற்கான மாவட்ட இணைப்பாளர், திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் சிவில் செயற்பாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் .













No comments: