News Just In

7/05/2021 07:44:00 PM

உலக வங்கியின் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயல்திட்டத்தின் மொத்தமாக ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் டிசெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு வந்து சேரும்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
உலக வங்கி நிதியுதவியளிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் டிசெம்பருக்குள் 5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று விடும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் திங்கட்கிழமை 05.07.2021 வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஒரு தொகுதி ஃபைசர் தடுப்பூசிகள் திங்கட்கிழமை 05.07.2021 கொழும்பை வந்தடைந்தன. அடுத்த சில வாரங்களில் கொண்டு வரப்படவுள்ள 800,000 தடுப்பூசிகளின் முதல் தொகுதியாக இது இருக்கின்றது.

உலக வங்கியின் இலங்கை கொவிட்-19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயல்திட்டத்தின் கீழ் நிதியுதவியளிக்கப்பட்ட மொத்தமாக ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் 2021 டிசம்பர் மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளன.

“இலங்கையர்களுக்கு பாதுகாப்பான, வினைத்திறன் மிக்க தடுப்பூசிகளுக்கான நியாயமான அணுகும் வசதியை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பங்காளர்களுடன் இணைச் செயற்பாட்டினை முதல்தொகுதி தடுப்பூசிகளின் விநியோகம் குறிக்கின்றது” என மாலைதீவுகள், நேபாளம், மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் நாட்டுப் பணிப்பாளர் பாரிஸ் எச். ஹடாட் ஷெர்வோஸ் தெரிவித்துள்ளார்.

“மேலும் பல தடுப்பூசிகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வருட இறுதியில் இலங்கையை வந்தடையும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2021 மே மாதம் இலங்கை அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட கடன் ஒப்பந்தத்தில் நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் உலக வங்கி தடுப்பூசி ஒப்புதலுக்கான இரண்டு அளவுகோல்கள் மூலமாக இந்த தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன.

இலங்கையின் பெருந்தொற்று முகாமைத்தும் மற்றும் தடுப்பு முயற்சிகளுக்கான, இலங்கை கொவிட் அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயற்றிட்டமானது மொத்தமாக 298.07 மில்லியன் டொலர்களில், மேலதிக 80.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தடுப்பூசி ஆதரவுக்கானதாக உள்ளது.

எதிர்பார்க்கப்படும் திட்ட முடிவுகளில் குறுகிய கால அவசர தேவைகளை பூர்த்தி செய்வது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான பணப்பரிமாற்றம், அத்துடன் தொற்றுநோய் தயாரிப்புக்கான சுகாதார அமைப்புகளை நீண்டகாலமாக வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

Sri Lanka Gets First Batch of World Bank-financed COVID-19 Vaccines

COLOMBO, July 5, 2021—A consignment of Pfizer vaccines today arrived in Colombo, the first batch of 800,000 doses to be delivered in the next few weeks. A total of five million vaccines financed through the World Bank's Sri Lanka COVID-19 Emergency Response and Health System Preparedness Project will be supplied by December 2021.

"The delivery of this first batch of vaccines reflects the joint work of the government of Sri Lanka and its partners to ensure fair access to safe and effective vaccines for Sri Lankans," said Faris H. Hadad-Zervos, World Bank Country Director for Maldives, Nepal, and Sri Lanka. "More vaccines are under review and will arrive by year's end."

Since the first COVID-19 case was confirmed in early 2020, Sri Lanka has successfully managed the pandemic, but the country now faces a third wave of coronavirus. World Bank support, which first prioritized health emergency needs, will also help Sri Lanka's public healthcare withstand future shocks.

So far, the Bank's support has helped strengthen Sri Lanka's testing capacity, such as establishing molecular biology laboratories and providing essential laboratory and biomedical equipment. Patient treatment capacity will be improved through the planned district-level oxygen generating plants, ensuring oxygen supplies are available to patients. New isolation units and ICU/High Dependency Unit facilities have been set up in secondary and tertiary hospitals. World Bank funds have also helped provide essential supplies and services to 70 COVID-19 treatment centers.

“The pandemic has undermined some of Sri Lanka’s impressive human capital gains achieved through many years of investment," said Lynne D. Sherburne-Benz, Regional Director for Human Development, South Asia Region. "We are happy to support Sri Lanka as it endeavors to regain the losses to health, education and social protection and secure a better future for all Sri Lankans."

The vaccines were procured through the procedure established in the loan agreement signed with the Government of Sri Lanka in May 2021, as well as the two criteria for the World Bank vaccine approval. The World Bank funding can be provided for vaccines that received regular or emergency license or authorization from at least one of the Stringent Regulatory Authorities identified by the World Health Organization for vaccines procured and/or supplied under the COVAX facility, and vaccines that received WHO prequalification or WHO emergency use listing.

The Sri Lanka COVID-19 Emergency Response and Health System Preparedness Project with a total of $298.07 million, including additional $80.5 million for vaccine support, has contributed to Sri Lanka's pandemic management and prevention efforts. Expected project results include meeting short term emergency needs, including cash transfers for economically vulnerable populations, as well as long term strengthening of health systems for pandemic preparedness.

No comments: