News Just In

7/30/2021 09:05:00 PM

ஏழைகளின் தோழன் அமைப்பின் ஓராண்டு பூர்த்தியில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு...!!


மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் இயங்கி வரும் மின்னல் ஒப் டீம் ஏழைகளின் தோழன் என்னும் அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் மியானி மண்டபத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளர் செல்வம் மற்றும் தலைமைப் பேச்சாளர் கண்ணன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மியானி நிறுவகத்தின் நிருவாகப் பொறுப்பாளர் அருட்தந்தை பிரபாஸ் அடிகள், தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவரும், சமூக சேவையாளருமான தா.பிரதீபன் உட்பட பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மின்னல் ஒப் டீம் ஏழைகளின் தோழன் என்பது டிக்டொக் வலைதளக் குழுமமாக ஆரம்பிக்கப்பட்டு பொழுதுபோக்கு குழுமத்தின் ஊடாக சமூக சேவைகளையும் மேம்படுத்த முடியும் என்பதை நிரூப்பித்துக் காட்டியதன் ஓராண்டு பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு செயற்பாடுகள் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அந்த வகையில் இன்றைய தினம் ஓராண்டு பூர்த்தியின் போது 25 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, சமூக சேவையாளர்களைக் கௌரவித்தல் மற்றும் ஓராண்டு நிறைவாக கேக் வெட்டுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இவ்வோராண்டினுள் 100க்கும் மேற்பட்ட செயற்திட்டங்களை சிறப்புடன் ஆற்றியிருக்கும் இவ்வமைப்பானது விசேடமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.















No comments: