News Just In

7/30/2021 08:53:00 PM

மட்டக்களப்பு– மகிழவெட்டவான் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இசை வெளியீட்டு விழா!!


(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு – மகிழவெட்டவான் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் முனீஸ்வரர் பெருமான் மீது பாடப்பெற்ற இசை வெளியீட்டு விழா இன்று ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

சிவஸ்ரீ தம்பிராசா பாலச்சந்திரன் குருக்கள் அவர்களின் தலைமையில் சிவபதமடைந்த பாக்கியராசா காளியரத்தினம் அவர்களின் நினைவாக மகிழவெட்டவான் முனீஸ்வரர் ஆலயத்தில் இவ் இசை வெளியீட்டு விழா இடம்பெற்றது.

மகிழவெட்டுவான் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ தம்பிராசா பாலச்சந்திரன் குருக்கள் இப் பாடல்களின் பாடலாசியர் ஆவார். இப் பாடல்களை மகிழவெட்டுவான் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ தம்பிராசா பாலச்சந்திரன் குருக்கள் மற்றும் அவரது புதல்வி சந்திர ஜெயாழினி ஆகியோர் பாடியுள்ளனர். பாடல்களுக்கு இசையை சுவிஸ்கிராமத்தைச் சேர்ந்த அ.செல்வக்குமார் அவர்கள் வழங்கியுள்ளதுடன். மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இசை வெளியீட்டு விழாவிற்கு அனுசரணையை காளியன் ரெட்னம் குடும்பத்தினர் மற்றும் ஆலய பரியாலன சபையினர் வழங்கியிருந்தனர்.

















No comments: