News Just In

7/27/2021 10:23:00 PM

மட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...!!


காணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இரு கார்களை முந்தி செல்ல முற்பட்டபோது முன்னால் சென்ற கார் சடுதியாக நிறுத்த முற்பட்ட நிலையில் பின்னால் சென்ற கார் முன்னால் சென்ற காரை மோதியதில் குறித்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

மேற்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.







No comments: