இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுறை சந்திரகாந்தன், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், மற்றும் கோவிந்தன் கருணாகரன் (ஜனா), பங்குபற்றலுடன் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
எல்லை நிர்ணயம் தொடர்பான இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகங்களினால் சம்பர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டு, ஏற்றுக்கொள்ளக்கூடியவைகள் மாவட்ட குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டதோடு இன ரீதியான முரண்பாடுகள் நீண்டகாலமாக இருக்கதக்கதான கிராம சேவையாளர் பிரிவுகள் பிரதேச செயலாளர் பிரிவுகள் என்பன தீர்மானம் எட்டப்பாடாது சில முன்மொழிவுகள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பது எனவும் ஏனையவைகள் அந்தந்த பிரதேச செயலகங்களின் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட புத்திஜீவிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நேற்று( 27) ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேச எல்லை விவகாரம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பட்ட கருத்து தோன்றியது.
இதன்போது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் உரையாற்றும் போது இவ் எல்லை நிர்ணயமானது மக்களுக்கு இடையில் நிர்வாக ரீதியாக நிலவும் சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டதே தவிர சிக்கல்களை வைத்துக்கொண்டு மேலும் பல சிக்கல்களை உருவாக்கின்ற தீர்வினை நாம் காண முடியாது இவற்றுக்கு நிரந்தரமான தீர்வினை நாம் காண வேண்டும்.
பாலமுனையை போடர்களாக கொண்டு இருக்கும் 113 குடும்பங்கள் ஏற்கனவே பாலமுனை நிர்வாகத்திற்குள் இணைக்கப்பட்டு தொடர்ச்சியாக பாலமுனை நிர்வாகத்தில் இருந்து வருகின்ற குடும்பங்களாகும். அம்மக்கள் சமூர்த்தி, மின்சாரம்,நீர் வழங்கல், போன்ற செயற்பாடுகள் எல்லாம் பாலமுனை கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஊடாகத்தான் மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த 113 குடும்பங்களையும் செல்வ நகர் கிராம சேவையாளர் பிரிவிற்குள் உள்ளடக்காமல் பாலமுனை சனத்தொகையோடு இணைத்து இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாக அதனை உருவாக்க வேண்டும் என்று முன் வைத்தனர். ஏற்கனவே செல்வநகர் கிராம சேவையாளர் பிரிவில்194 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மக்களுடைய பிரச்சினைக்கு நியாயமான அடிப்படையில் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.என்று இங்கு குறிப்பிட்டார். இருப்பினும் இதனை மீண்டும் கலந்துரையாடி சுமுகமாக தீர்த்து கொள்வது என்றும் இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும் தீர்மானித்துக் கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான வியாலேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்,மண்முனை பற்று தவிசாளர், பாலமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும்,முன்னாள் நகரசபை உறுப்பினர் ULMN. முபீன்,முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: