News Just In

7/29/2021 07:32:00 AM

மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்...!!


நாட்டில் சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேற்கு மற்றும் வட மேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடும்.

ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

No comments: