மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) உள்ளக விளையாட்டுக் கழகத்தால் சதுரங்கம் (Chess) மற்றும் கரம் (Carrom) விளையாட்டுக்களின் சுற்றுப்போட்டி EDS இன் டென்மார்க் (Denmark) கிளையின் நிதி அனுசரனையுடன் ஆவணி மாத இறுதி வாரத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சதுரங்க போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடாத்தப்பட உள்ளது.
1 பாடசாலை மாணவர்களுக்கானது
a. 15 வயதுக்கு கீழ்
b. 15 வயதுக்கு மேல்
2. EDS பழைய மாணவர்களுக்கானது
3. வெளியாளர்களுக்கானது
வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்படும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
இராசதுரை கரிகாலன் (தொலைபேசி இல: 075-6721767)
வர்ணகுலசிங்கம் கமலதாஸ் (தொலைபேசி இல: 077-7679596)
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
கரம் சுற்றுப்போட்டி 15 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமே உரியது. வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும்.
இது தொடர்பான விபரங்களைப் பெற:
கோபாலப்பிள்ளை சாத்வீகன் (தொலைபேசி இல: 075-4258578
இராசதுரை கரிகாலன் (தொலைபேசி இல: 075-6721767)
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
போட்டியாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 15.08.2026 பிற்பகல் 4.00
ஒரு போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூபா. 500.00 எனவும் கல்வி அபிவிருத்திச் சங்க செயலாளர் வ. கமலதாஸ் தெரிவித்தார்.
No comments: