News Just In

7/29/2021 07:33:00 PM

வறுமையின் நிமித்தம் தொழிலுக்குச் சென்றால் எம் தமிழ் பெண்களுக்கு மானத்தையும், உயிரையும் இழக்கும் நிலைதான் உருவாகின்றது...!!


வறுமையின் நிமித்தம் தொழிலுக்காகச் சென்று மானத்தையும், உயிரையும் இழக்கும் நிலையில் தான் இன்று எமது பெண்பிள்ளைகளின் நிலைமை காணப்படுகின்றது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் வீட்டில் தீக்காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சிறுமி விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வீட்டில் சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்த விடயம் தொடர்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினராகிய அச்சிறுமிக்கும், அக்குடும்பத்திற்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு நடந்த சம்பவத்திற்கு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது தொடர்பில் மக்கள் தான் தெளிவடைய வேண்டும். இவ்வாறு மக்கள் பிரதிநிதி என்று கூறப்படும் ஒருவர் வீட்டில் ஒரு சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, தீக்காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் இறப்பதென்பது தவறுதலாக நடந்த விடயமாகக் கருத முடியாது. அந்த வீட்டில் அச்சிறுமி கடுமையான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார் என்பது தான் இதன் அர்த்தம்.

தனது வீட்டின் வறுமைச் சூழல் காரணமாக தனது வயதையும் பொருட்படுத்தாது வீட்டு வேலைக்குச் சென்று தன் வீட்டின் வறுமையைப் போக்க வேண்டும் என்று எண்ணிய அச்சிறுமிக்கு அந்த வீட்டில் தகுந்த பாதுகாப்பு இருந்திருக்கவில்லை என்றே கருதத் தோணுகின்றது. ஒரு அமைச்சரின் வீட்டிலேயே வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறமிக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் ஏனைய சிறுவர்களின் நிலைமைகள் எவ்வாறு இருக்கும்.

இது இனம் சார்ந்து பார்க்கக் கூடிய விடயமாக இல்லாவிட்டாலும், இடம்பெற்ற சம்பவம் அவ்வாறு பார்க்கும் விதமாகவே அமைந்திருக்கின்றது. பல நல்லவர்களும் இருக்கின்ற இஸ்லாமிய சமூகத்தில் கடந்த ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விடயத்துடன் தற்போதைய சிறுமியின் மரணம் தொடர்பான விடயத்தையும் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபட்ட பெண்களில் ஒருசிலர் தமிழ் பெண்களாக இருக்கின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தி தங்கள் வசமாக்கி அவர்களை மனமாற்றம் செய்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு உள்ளீர்த்திருக்கின்றார்கள். இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில ரிசாட் பதியுதீன் அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த இடிப்படையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்ற விதத்தில் நாங்கள் நோக்குகையில் அண்மையில் ரிசாட் அமைச்சரின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான சிறுமி விடயத்திலும் இதே போன்ற பாரிய திட்டங்களுக்கு உள்வாங்கும் முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அதற்கு அச்சிறுமி இணங்காமையினால் பல சித்திரவதைகள் இடம்பெற்று இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகி மரணமாக்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கத் தோணுகின்றது.

எமது தமிழ்ப் பெண்களின் வறுமை நிலைமையினைப் பயன்படுத்தி தொழில்வாய்ப்பினை வழங்குவதாகக் கூறி அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் விடயங்கள் இன்று நேற்றல்ல போராட்ட காலங்களிலும் அவதானிக்கப்பட்ட விடயமாகும். போராட்ட காலத்தில் இதற்கான பதில்கள் வேறு விதமாக இருந்தது. ஆனால் தற்போதைய போராட்ட மௌனிப்பு காலத்தில் இவை அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே எமது மக்கள் தான் இவற்றைச் சிந்திக்க வேண்டும். வறுமையின் நிமித்தம் தொழிலுக்காகச் சென்று மானத்தையும், உயிரையும் இழக்கும் நிலையில் தான் இன்று எமது தமிழ்ப் பெண்பிள்ளைகளின் நிலைமை காணப்படுகின்றது. எனவே இவற்றை சிந்தித்து இவ்வாறானவர்களிடம் தொழில் புரிபவர்கள் செயற்பட வேண்டும்.

ஹிசாலியின் மரண விசாரணையில் சட்டம் எவ்வித வளைவுகளுக்கும் உட்படுத்தப்படாமல் நடந்த உண்மை விடயங்கள் விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தலோடு மாத்திரம் விசாரணை மட்டுப்படுத்தப்படாமல் அதன் உள்ளர்ந்த காரணங்களையும் கண்டறிய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்த விசாரணையின் மூலம் கண்டறியப்படுகின்ற குற்றவாளிகளுக்கு அதிகூடிய தண்டணையையும் இந்த அரசு வழங்குவதோடு, இது போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களிலும் நடைபெறாவண்ணம் சட்டங்களும் இறுக்கமாக்கப்பட வேண்டும்.

இங்கு தமிழ் சிங்களம், முஸ்லீம் என்று அல்லாமல் எந்த சிறுமிகளுக்கும் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமையை இந்த அரசாங்ககம் உறுதிப்படுத்த வேண்டும்.

அன்பார்ந்த தமிழ்த் தாய்மார்களே எங்களது பிள்ளைகளை நாங்கள் தான் பாதுகாக்க வேண்டும். தொழில் நிமித்தம் எமது பிள்ளைகள் மாற்று சமூகத்தின் வியாபார நிலையங்கள், வீடுகளுக்கு அனுப்பி வைப்பதனை இனியாவது நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

No comments: