News Just In

7/17/2021 12:37:00 PM

குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி கைகூடியது- அல் மஜ்மா கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மஜ்மா நகர் மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி கைகூடியது என்று அல் மஜ்மா கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

மஜ்மா நகர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

மஜ்மா நகர் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் இரு வீட்டுத் திட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர்த்திட்டம் உவராக காணப்படுவதாலும் மஜ்மா நகர் மக்கள் பாரிய குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு அன்னூர் தொண்டு நிறுவனத்தின் ((Al Noor Charity Association) ) பணிப்பாளரிடம் மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைமையில் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 08 பேரூடாகவும் எழுத்து மூல கோரிக்கையினை பல மாதங்களுக்கு முன் விடுத்தோம்.

கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அன்னூர் தொண்டு நிறுவனம் ஆழ்துளைக்கிணறொன்றை அமைத்து 50000 லீட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தாங்கியூடாக 3 கீலோ மீட்டர் வரை நீர் வழங்கும் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் குறித்த பாரிய பணியினை மேற்கொள்ள முன்வந்த நிறுவனத்தின் பணிப்பாளர் அல் ஹாஜ் அலியார் ஹாஜியார் குறித்த நிருவனத்தின் கிழக்கு மாகாண இணைப்புச்செயலாளர் சகோதரர் நளீம் கல்குடாத்தொகுதி இணைப்பாளர்கள் சகோ நிஜாம சகோ லியாப்தீன் ஆகியோருக்கும் இத்திட்டத்திற்கான 10 பேஜ் அரச காணியை வழங்கி இத்திட்டத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க அனுமதியை தந்த ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா இதற்கான நெறிப்படுத்தல் வழிமுறைகளை வழங்கிய உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் காணிப்பிரிவு உத்தியோகத்தர் எம்.முக்ஸித் பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் செயலாளர் எஸ்.சிஹாப்தீன் பிரதேச உறுப்பினர்கள் சமுக மட்ட அமைப்புக்களுக்கும் கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாக நன்றியினை தெரிவிக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஜ்மா நகர் கிராம அபிவிருத்திச் சங்கம் இப்பிரதேச மக்களின் நன்மைகருதி இவ்வாறான பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: