News Just In

7/15/2021 06:10:00 PM

15 வயது சிறுமி இணையத்தளம் மூலம் விற்பனை- இணையத்தள உரிமையாளரின் வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபா பணம் ...!


கல்கிஸையில் 15 வயது சிறுமி, இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தள உரிமையாளரின் வங்கிக் கணக்கில் 5 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 11 பேரின் வங்கிக் கணக்கிலுள்ள 10 கோடி ரூபாவை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், சட்டவிரோத சொத்துகள் மற்றும் உடமைகள் விசாரணைப் பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்கிறது.

இந்த நிலையில், சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள காவல்துறை பேச்சாளர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேகநபர்களைக் கைதுசெய்வது காவல்துறையினரின் கடமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறாக செயற்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதன் மூலமாக மாத்திரம் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது. அனைத்து தரப்பினருக்கும் இதற்கான பொறுப்புள்ளது என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தந்தையால், மகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமையானது மிகவும் வேதனைக்குரிய நிலையாகும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments: