நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இன்றும்(3) நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கந்தளாய் பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரியின் தலைமையில் பேராறு பகுதியிலும் வழங்கப்பட்டு வருகின்றது.கந்தளாய்,மத்ரஸா நகர்,பேராற்றுவெளி மற்றும் அணைக்கட்டு போன்ற பகுதிகளில்
பயணத்தடை காரணமாக ஒவ்வொரு வீடுகளாக சென்று கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
இதனை சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமூர்த்தி திட்ட முகாமையாளர் , சமூர்த்தி வலய வங்கி முகாமையாளர் உதவி முகாமையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொது மக்கள் முகக்கவசங்களை அணிந்து சம இடைவெளிகளை பேணி கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டார்கள்.


No comments: