News Just In

6/30/2021 01:26:00 PM

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...!!


நாட்டில் நிலவும் கொரோனா அச்சநிலை காரணமாக மூடப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்களில் சிலவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்களான நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமக்கான திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்து கொள்ள 011-2677-877 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: