News Just In

6/29/2021 07:59:00 PM

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனினால் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு...!!


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனினால் கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலுடன் உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இன்று பொத்துவில் பிரதேசத்தில் 150 பேருக்கும், நாவிதன்வெளி பிரதேசத்தில் 150 பேருக்கும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 150 பேருக்கும், சம்மாந்துறை பிரதேசத்தில் 150 பேருக்கும், திராய்மடு பிரதேசத்தில் 80 பேருக்குமாக மொத்தம் 680 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்த ஜீ மகராஜ் மற்றும் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களது ஒழுங்கமைப்பின் கீழ் 7 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் கலந்து கொண்டு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.

குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் உடனான குழு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்.












No comments: