News Just In

6/10/2021 08:02:00 AM

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தப்போகும் டெங்கு- மக்களுக்கு விசேட எச்சரிக்கை...!!


நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய அனுர ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பல இடங்களில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் அடுத்தவாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக கொழும்பு மாவட்டம், அதிக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் டெங்கு நுளம்புகள் பரவுவதை தடுக்கும் வகையில் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் வைத்தியர் அனுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

No comments: