News Just In

6/08/2021 04:13:00 PM

கப்பலில் ஏற்பட்ட தீ தொடர்பில் சட்ட நடவடிக்கைகான கலந்துரையாடல்!!


மாளிகைக்காடு நிருபர்
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி அமைச்சில் நேற்று (07.06.2021) சிறப்புக் கூட்டம் நடைபெற்றது .

இச் கூட்டமானது ஜனாதிபதி சட்டத்தரணியும், நீதி அமைச்சருமான அலி சப்ரி மற்றும் அலங்கார மீன், உள் நாட்டு மீன் மற்றும் இறால் வேளாண்மை, மீன்வள துறைமுக மேம்பாடு, பல நாள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதிக்கான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜசேகர மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.

கப்பலில் ஏற்பட்ட தீ எமது நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் அமைப்பு, மீன்வளம் மற்றும் நாட்டின் பல்வேறு துறைகளை கடுமையாக பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் நாட்டின் பொருளாதாரம், சுற்று சூழல் அமைப்பு, மீன் வளம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு ஏற்பட்ட இச்சேதத்தை சரிசெய்ய சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் துறைக்கு உதவுவதாகும்.

இதற்கமைய சுற்றுச்சூழல், மீன்வளத் துறை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தீயினால் ஏற்பட்ட எதிர்காலத்திற்குமான செலவினங்களுக்கும் இழப்பீட்டைப் பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியில் முழுமையாக ஒத்துழைக்க சட்டமா அதிபர் அழைக்க வேண்டும்.

இதற்காக புத்திஜீவிகளின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நாட்டிற்கான அதிகபட்ச இழப்பீட்டினை பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உத்தரவாதம் அளிக்கப்படும் என நீதி அமைச்சர் கூறினார்.






No comments: