News Just In

6/07/2021 03:31:00 PM

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகை 6 இலச்சம் பேரில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 3 இலச்சத்து 11 ஆயிரம் பேர்.

எனவே, 3 இலட்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றவேண்டியுள்ளது. இருந்தபோதும் நாளை 25 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments: