News Just In

6/06/2021 08:31:00 PM

பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணம் செய்யும் வாகனங்களின் சாரதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை...!!


நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக, இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்க்பட்டுள்ள நிலையில், நேற்றைய நாளில் மாத்திரம் 7 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்பு பட்டவர்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதிகளில் வானகங்கள் குறைவாக காணப்படுவதன் காரணமாக அதிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமையே விபத்துக்கு காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விபத்துக்குள்ளாகும் நபர்களின் நிலைமையினை ஆராய்ந்து, விதிகளை மீறி செயற்படும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்த தீர்மானிக்கபட்டுள்ளது.

சுகாதார தரப்பினருடன் இணைந்து இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments: