கொரோனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் 84 வயதுடைய பெண் ஒருவர், ஏறாவூர் பிரதேசத்தில் 58 ,67 வயதுடைய பெண் இருவரும் , வாழைச்சேனையில் 36 வயதுடைய கர்ப்பிணி ஒருவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 பேரும்
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 08 பேரும்
காத்தான்குடி பிரதேசத்தில் 18 பேரும்
ஓட்டமாவடி பிரதேசத்தில் 16 பேரும்
கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் 10 பேரும்
செங்கலடி பிரதேசத்தில் 03 பேரும்
ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவரும்
பட்டிப்பளை பிரதேசத்தில் 07 பேரும்
வவுணதீவு பிரதேசத்தில் 10 பேரும்
வெல்லவெளி பிரதேசத்தில் 02 பேரும்
கிரான் பிரதேசத்தில் 06 பேரும்
ஆக மொத்தம் இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 32 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: