News Just In

6/27/2021 02:32:00 PM

ஏழைகளின் பசியறிந்த ஏழை நான்; இறைவன் தந்தவற்றை இறைவனின் பொருத்தம் நாடி பகிர்ந்தளிக்க வேண்டும்- தொழிலதிபர் எம்.எஸ்.எம். முபாரக்!!


(நூருள் ஹுதா உமர்)
இறக்காமம் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத கொக்குலான் கல், அரபா நகர் மக்களுக்கான முபாரக் டெக்ஸ் குழும நிவாரண பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையிலான குழுவினர் இந்த நிவாரண பணிகளை முன்னெடுத்த பின்னர் அப்பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றிய முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக், மலசல கூட வசதி, மின்சார வசதி, வீதி அபிவிருத்தி, தெருவிளக்கு, மாலை வேளைகளில் உள்ள பாம்பு தொல்லை, யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வகையான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் எம் எல்லோருக்கும் உள்ளது. பிரதேச அரசியல்வாதிகள் இது தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும்.

ஏழை வயிற்றில் பிறந்த நான் இன்று ஏழைகளின் துன்பத்தை பகிர்ந்து கொள்ள கிடைத்தமையை எண்ணி இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மக்களின் ஏழ்மை நிலையை போக்கி இறைவன் இந்த மக்களுக்கு அருள் பாலிக்க பிராத்திக்கிறேன். ஊடகம் வாயிலாக இந்த மண்ணின் பிரச்சினைகளை தாய்மார்கள் எடுத்துரைத்ததை பார்வையிட்டேன். அப்போதே இவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தேன். இது தொடர்பில் ஊடகவியலாளரின் வேண்டுகோளை ஏற்று இங்கு உதவ இன்று அவசரமாக உதவிகளை கொண்டுவந்துள்ளேன் என உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

கடுமையான வறுமையில் வாடிய நான் வறுமை கற்றுத்தந்த பாடங்களை கற்று கொண்டு பின் நாட்களில் இறைவன் கொடுத்த செல்வங்களை மக்களுக்கு சேவை யாக வழங்கி வருகிறேன். இங்கு அமைந்துள்ள பள்ளிவாசல் முழுமையாக அழகான முறையில் கட்டி முடிக்கப்பட்டு, எதிர்வரும் பெருநாளை சிறப்பாக கொண்டாட வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறேன். அது மாத்திரமின்றி தன்னால் முடிந்த சகல உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளேன்.

அந்தந்த இடத்திற்கு நேரடியாக சென்று மக்களுக்கான உலருணவுகளை வழங்கி வைத்தது போன்று கடந்த காலங்களில் மருதமுனை, சாய்ந்தமருது, பொத்துவில் போன்ற இடங்களுக்கு வழங்கப்பட்டது போன்று இனிவரும் காலங்களில் ஏனைய பிரதேசங்களுக்கும் உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் இந்நிகழ்வில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தார்.





No comments: