News Just In

6/04/2021 12:57:00 PM

5000 ரூபா கொடுப்பனவுக்கு தேவையான நிதி சமுர்த்தி வங்கிக்கு வழங்கி வைப்பு...!!


வருமானத்தை இழந்த மக்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவுக்கு தேவையான நிதி சமுர்த்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயணத் தடை காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

கொழும்பு, அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, காலி, நுவரெலியா உட்பட நாட்டின் சகல மாவட்டங்களிலும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமானதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளார்.

சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் 5000 ரூபா கொடுப்பனவை பெறுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் மூவாயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: