News Just In

6/07/2021 08:04:00 PM

மட்டக்களப்பு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 450,000 சைனோபாம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு...!!


சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் செயல்பாடுகள் மேலும் 12 மாவட்டங்களில் நாளை ஆரம்பிப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

12 மாவட்டங்களில் முதியோர், கர்ப்பிணித்தாய்மார் மற்றும் அரச ஊழியர்களுக்காக 450,000 சைனோபாம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாத்தளை , நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை , பதுளை , அனுராதபுரம் , புத்தளம் , அம்பாறை , மட்டக்களப்பு, மொனராகல மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நாளை முதல் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

இந்த மாவட்டங்களில் தடுப்பூசி திட்டங்களைத் தொடர நேற்று ஒரு மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

மேலும் ஒரு மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகள் ஜூன் 9 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்தநிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட்ட பொதுமக்கள், கொவிட் ஒழிப்பு திட்டத்தில் முன்னணியில் இருக்கும் அரச ஊழியர்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: