News Just In

5/02/2021 04:21:00 PM

கல்முனை மாநகர பிரதேசங்களில் களைகட்டும் பண்டிகை வியாபாரம்- பிந்திய இரவுகளிலும் கடும் உன்னிப்பாக கண்காணிக்கும் சுகாதார படை!!


நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் ஆகியோரின் கண்காணிப்பில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தாரின் நெறிப்படுத்திலில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசால் தலைமையிலான குழு சாய்ந்தமருது பிரதேசத்தில் கொவிட்-19 யினை கட்டுப்படுத்துமுகமாக பொது இடங்களுக்கு திடீர் விஜயம் இன்று இரவு 09.30 மணிவரை மேற்கொண்டனர். இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுநர்கள்,பல்நோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்களத்தின் பயிலுநர்களும் கலந்து கொண்டனர்

வெசாக் மற்றும் நோன்பு பெருநாள் பண்டிகை காலம் என்பதனால் மக்கள் புத்தாடைகள் மற்றும் பண்டிகை கால கொள்வனவில் சாய்ந்தமருது வர்த்தக நிலையங்களில் பரபரப்பாக இயங்கிவருவதனால் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மருதமுனையிலும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்களும் இணைந்து கொவிட்-19 யினை கட்டுப்படுத்துமுகமாக வர்த்தக நிலையங்களுக்கும், மக்கள் கூடும் இடங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுத்ததுடன், கொவிட்-19 பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.









No comments: