News Just In

5/18/2021 01:25:00 PM

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி...!!


அரச ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் கொவிட் பரவல் நிலையை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை வழங்கப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: