
1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது திடீரென வெகுண்டெழுந்த சிங்களப் பொதுமக்களின் தன்னிச்சையான கோபம் அல்ல. மாறாக, அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உயர் மட்ட அரசியல் தலைமைகளாலும் அரசு இயந்திரத்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இனவழிப்புப் போராகும்.
இது காலத்தால் மறைக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டாலும் நேற்றைய(23.07.2026) நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சிறப்பு விவாதத்தில் அனுர தரப்பு எம்.பி க்களால் இந்த குற்றச்சாட்டு பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக கொழும்பில் தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர், அந்த கொலைகளுக்கான உதவிகள் எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டது, இந்த அரசியல் பின்புலத்தில் இருந்த கொடூரர்கள், அதன் பின் இது எப்படி தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு பரப்பப்பட்டது என்பதெல்லாம் குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விடயம் அப்போது இலங்கையின் உள்நாட்டு போரை காரணம் காட்டி வெளிவராமல் சிங்கள மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டாலும், அந்த கொடூரத்தின் மறுபக்கம் 10 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையின் மூத்த மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவனால் உலகத்திற்கு வெளிச்சமிடப்பட்டது.
இலங்கையின் மூத்த மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் (Victor Ivan), தனது புகழ்பெற்ற ‘ராவய’ (Ravaya) பத்திரிகையில் எழுதிய "களு ஜூலையே செகவாது துமராய" (கறுப்பு ஜூலையின் மறைக்கப்பட்ட மறுபக்கம்) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரையின் வழியே, இதன் பின்னணியில் இருந்த பேரினவாத அரசியலையும், தமிழர்கள் சந்தித்துக் குருதி சிந்திய அவலங்களையும் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இக்கட்டுரையின் மிக முக்கியமான திருப்புமுனை, அன்றைய கொழும்பு மேயரும், ஆளும் UNP கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கே. கணேசலிங்கம் (K. Ganeshalingam) வழங்கிய அதிர்ச்சியூட்டும் சாட்சியமாகும்.
விக்டர் ஐவன் நடத்திய தீவிர தேடலின் போது, "அரசாங்கம் ஏன் இந்த இனக் கலவரத்தை அனுமதித்தது? இதன் பின்னணியில் என்ன அரசியல் கணக்கு உள்ளது? என்று கேட்கப்பட்டபோது, கணேசலிங்கம் அந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படையாகப் உடைத்துள்ளார்.
' கறுப்பு ஜூலை என்பது நிறுத்த முடியாத ஒன்று. சிங்கள மக்கள் மத்தியில் உருவான இந்த நிலையை எப்படி மடை மாற்றுவது என்று எமக்கு தெரியவில்லை.
இந்த கலவரத்தில் என் பங்கு மட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினதும் பங்கு அமைந்திருக்கிறது.
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம். இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
''ஒரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகரின் (High Commissioner) இல்லத்தில் நடந்த உத்தியோகபூர்வ இரவு விருந்து ஒன்றில் விக்டர் ஐவனும், கே. கணேசலிங்கமும் பங்கேற்றுள்ளனர். அங்கு மது பரிமாறப்பட்டிருந்த நிலையில், கணேசலிங்கம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு முழுமையான மதுபோதைநிலையில் இருந்துள்ளார்.
அப்போது விக்டர் ஐவன் அவரிடம், 1981 இல் யாழ் நூலகத்தை எரிப்பதற்கு நீங்களும் (அமைச்சர்) சிறில் மத்தியூ போன்றோருடன் உடந்தையாக இருந்தீர்கள் தானே?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுபோதையில் இருந்த கே. கணேசலிங்கம் எவ்வித தயக்கமும் இன்றி, "அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் (கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு) போயிருந்தோம் என்பது உண்மை..." என்று உளறி ஒப்புக்கொண்டுள்ளார்.
அரசின் உயர்மட்டத்தினரே திட்டமிட்டு கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை ஏவவும் கொழும்பில் இருந்து குண்டர்களையும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தனர் என்ற கசப்பான உண்மையை ஒரு தமிழ் அரசியல்வாதியே போதையில் உறுதிப்படுத்திய நிகழ்வு இதுவாகும்.
கணேசலிங்கம் போதையில் பேசியது 1981 யாழ் நூலக எரிப்புப் பற்றி என்றாலும், 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் பின்னணியிலும் இதே கே. கணேசலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இணைந்து வன்முறையாளர்களுக்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் விக்டர் ஐவன் தனது பத்தி எழுத்துக்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.
இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
இதன்போது சூதாகரித்துக்கொண்ட அவர் மைதியாக இருந்ததாகவும், ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் உளறிக்கொட்டிய சந்தர்ப்பமாக இது அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி எக்காலமும் வாய் தீர்க்க கூடாது என பத்திரிகையாளர் விக்டருக்கு அழுத்தம் மிகு கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இந்த சந்திப்பு நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 10ஆவது கருப்பு ஜூலை நினைவு நாளில் இந்த உண்மைகள் அனைத்தையும் விக்டர் ஐவன் பத்திரிகையில் இந்த விடயங்கள் அனைத்தையும் 'களு ஜூலையே செகவாது துமராய'' என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான UNP அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளாலும், அரசியல் அடக்குமுறைகளாலும் சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிருப்தியும் கொந்தளிப்பும் நிலவியது.
இந்த மக்கள் கோபம் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய உள்நாட்டுக் கிளர்ச்சியாக வெடிக்கலாம் என UNP தலைமை அஞ்சியது.
எனவே, தங்கள் ஆட்சிக்கு வரவிருந்த பேராபத்தைத் தடுப்பதற்காகவும், சிங்கள மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காகவும், தமிழர்களைப் பலிகடாவாக்கி இந்த வன்முறையை UNP அரசாங்கமே திட்டமிட்டுத் தூண்டிவிட்டது.
இந்த வாக்குமூலத்தின் மூலம், 'களு ஜூலை' என்பது ஒரு சமூகக் கலவரம் அல்ல, UNP அரசு தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நடத்திய திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
No comments: