News Just In

7/24/2026 10:54:00 AM

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நிறைவு மற்றும் மூன்றாம் தவணை பற்றிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கான  இரண்டாம் தவணை நிறைவு மற்றும் மூன்றாம் தவணை   பற்றிய அறிவிப்பு




2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவடையவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஜூலை 31 ஆம் திகதி நிறைவடைவதுடன், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: