News Just In

5/11/2021 09:07:00 AM

இன்று நள்ளிரவு முதல் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்- இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு...!!


இலங்கையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி இன்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்

No comments: