News Just In

5/11/2021 08:59:00 AM

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை...!!


மாகாணங்களுக்கு இடையேயான நீண்ட தூர பஸ் சேவைகளை கட்டுப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது.

நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து நடவடிக்கை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பஸ்களை இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அனைத்து டிப்போ கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து ரயில் சேவைகள் தொடர்பான முடிவு இன்று எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

No comments: