தொலைபேசி மூலம் நியமனங்கள் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மேலதிக அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் மாவட்ட அலுவலகங்களில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்துப்பூர்வ மற்றும் நடைமுறை சோதனைகளும் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் சுமித் அழகக்கோன் மேலும் கூறினார்.

No comments: