திருமலை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அமரத்துவமடைந்த பிரான்ஸிஸ் சேவியர் மரியான்பிள்ளை அவர்களின் நினைவையொட்டி இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. நேற்றைய தினமும், இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்திட்டம் நாளையும் என இவ்வுணவு வழங்கும் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகளை விளம்பரப்படுத்தல் என்பதைத் தாண்டி, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தங்கள் இல்லங்களில் இடம்பெறும் நிகழ்வுகளின் போதாவது அநாதரவானவர்களை நினைத்து அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்பதற்காகவே இச்செயற்பாட்டினைப் பகிரங்கப் படுத்த எத்தணிக்கின்றோம் எனவும் ஏற்பாட்டாளர்கள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments: