News Just In

5/11/2021 07:08:00 AM

உடன் அமுலுக்கு வரும் வகையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...!!


இலங்கையின் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்கு உட்பட்ட உயன்வத்த, உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் கொஸ்கஸ்தன்ன பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட உடஹவிட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments: