News Just In

5/11/2021 09:35:00 PM

மட்டக்களப்பு- கொம்மாதுறையில் இரண்டு சைக்கிள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து- சாரதி தப்பி ஓட்டம்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொம்மாதுறை பிரதான வீதியில் இரண்டு சைக்கிள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 21 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 27வயது இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டிச் சென்றவர் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக இணைப்பு செயலாளர் என அப்பிராந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் சம்பவம் நடந்த இடத்தை விட்டு தப்பியோடியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் காரின் இலக்க தகடை மாற்ற முனைந்ததாகவும் அதனை மக்கள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.














No comments: