News Just In

5/11/2021 10:03:00 PM

நாடுபூராகவும் இரவு வேளையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என வெளியாகிய செய்தி தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்தி!!


நாடு பூராகவும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தினசரி இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவல் தொடர்பில் இராணுவத் தளபதிகருத்து தெரிவிக்கும் போது, குறித்த தகவலானது உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: