News Just In

5/20/2021 09:43:00 AM

நீர் வழங்கல் சபையின் சாய்ந்தமருது காரியாலய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனை...!!


நூருள் ஹுதா உமர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்தமருது காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேருக்கும் நேற்று(19) எடுக்கப்பட்ட அண்டிஜென் பரிசோதனையில் பெறுபேறுகள் சகலருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்தமருது காரியாலயத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனையில் அனைத்து ஊழியர்களினதும் பெறுபேறு நெகடிவ் ஆக காணப்பட்டது.

நேற்றைய தினம் அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதுடன் அந்த அலுவலகத்தில் கடமை புரிந்த சாய்ந்தமருதை சேர்ந்த 2 உத்தியோகதரதர்களும் அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசால், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை பொலிஸாரும் கலந்து கொண்டனர்.





No comments: