News Just In

5/20/2021 08:40:00 AM

மட்டக்களப்பு- இராமகிருஷ்ண மிஷனால் கிரான்குளத்தில் தனிமைப்படுத்தலில் உள்ள 627 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு...!!


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் கொரோனா நிவாரணப் பணிகளின் தொடர்ச்சியாக கிரான்குளத்தில் தனிமைப்படுத்தலில் உள்ள 627 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கலாக புதன் கிழமை (2021.05.19) வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று நிலை காரணமாக கிளாங்குளத்தில் தனிமைப்படுத்தலில் உள்ள 627 குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளையின் மூலம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் படி 10 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவையாளரின் மூலம் நியமிக்கப்பட்ட நபர்களின் உதவியுடன் வாகனங்களின் மூலம் வீடு வீடாக சென்று வழங்கி வைக்கப்பட்டது.






No comments: